சென்னை : ''பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,'' என்று, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில், 'மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆப் சோஷியல் சர்வீஸ்' என்ற அமைப்பு, காப்பகம் நடத்தி வந்தது. அங்கு, சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர் என 130 பேர் இருந்தனர். காப்பகத்தின் நிர்வாக செயலர் இசபெல்லா ரிச்சர்ட்சன், சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். அந்த காப்பகத்தில், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக, புகார் வந்தது. விசாரணையில், புகார் உறுதியானதால் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பதிவு செய்யாத 92 முதியோர் இல்லங்கள் கண்டறியப்பட்டு, நான்கு இல்லங்கள் மூடப்பட்டன; ஒன்பது குழந்தைகள் காப்பகங்களும் மூடப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்கள், சிசுக்கொலை தடுக்கவும், முதியோர் நலன் பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு கீதா ஜீவன் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement