ரவுடிகளை ஒடுக்க குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா; தமிழக அரசு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளை ஒடுக்க குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா; தமிழக அரசு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (18)
Share
சென்னை: ரவுடிகளை ஒடுக்க ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா' தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை, அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட வேலு
ChennaiHC, Rowdies, Tamilnadu, Bill, Assembly, சென்னை, உயர்நீதிமன்றம், ரவுடிகள், தமிழகம், மசோதா, சட்டம்

சென்னை: ரவுடிகளை ஒடுக்க ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா' தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இன்று (செப்.,28) நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசு தரப்பு கூறியதாவது:


latest tamil news


தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒடுக்கும் வகையில் 'திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டம்' என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக இயற்றப்படும். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ‛இந்த மசோதா விரைவில் சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளைக் கட்டுப்படுத்த போலீசாருக்கு உதவியாக இருக்கும்,' எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X