நீதிமன்ற அவமதிப்பு குறித்து திரிபுரா முதல்வர் சர்ச்சை பேச்சு

Added : செப் 28, 2021
Share
Advertisement
அகர்தலா : ''நீதிமன்ற அவமதிப்புக்கு அரசு அதிகாரிகள் அஞ்சக் கூடாது. போலீஸ் துறையே என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது,'' என, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் குடிமைப் பணியாளர் அதிகாரிகள் சங்க நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று பேசியதாவது:அரசு அதிகாரிகள் பலர் நீதிமன்ற

அகர்தலா : ''நீதிமன்ற அவமதிப்புக்கு அரசு அதிகாரிகள் அஞ்சக் கூடாது. போலீஸ் துறையே என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது,'' என, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் குடிமைப் பணியாளர் அதிகாரிகள் சங்க நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று பேசியதாவது:
அரசு அதிகாரிகள் பலர் நீதிமன்ற அவமதிப்புக்கு அஞ்சுபவர்களாக உள்ளனர். ஏதாவது ஒரு கோப்பை தொட்டாலே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னை சிறையில் அடைத்துவிடுவர் என நடுங்குகின்றனர். பிரச்னை எங்கு உள்ளது என்பது புரியவில்லை.இதுவரை எத்தனை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உங்களை சிறையில் தள்ளுவதற்கு முன், நான் சிறை செல்வேன்.ஒருவரை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு போலீசாரின் உதவி வேண்டும். அந்த போலீஸ் துறையே என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.நீதிமன்ற அவமதிப்புக்கு புலியை பார்த்தது போல அதிகாரிகள் அஞ்சுகின்றனர். நான் தான் புலி என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். யார் ஆட்சியில் இருக்கின்றனரோ, அவர்களிடம் தான் அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரின் இந்த பேச்சு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X