பொது செய்தி

இந்தியா

கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதமாகும்?

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக கூடுதல் தகவல்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டு உள்ளது. இதனால், அந்த தடுப்பூசிக்கான அனுமதி கிடைப்பதில் மேலும் தாமதமாகும் என தெரியவந்துள்ளது.நம் நாட்டில் 'கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி' ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம்
கோவாக்சின், உலக சுகாதார நிறுவனம்,  அனுமதி, பாரத்பயோடெக், covaxin, who, bharatbiotech,

புதுடில்லி: கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக கூடுதல் தகவல்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டு உள்ளது. இதனால், அந்த தடுப்பூசிக்கான அனுமதி கிடைப்பதில் மேலும் தாமதமாகும் என தெரியவந்துள்ளது.

நம் நாட்டில் 'கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி' ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசி 78 சதவீத செயல் திறன் வாய்ந்தது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்த தடுப்பூசியை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்காக அவசர கால அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளது. அதனுடன் மருந்து தயாரிப்பு விவரங்கள், ஆய்வு முடிவுகள், மருந்திற்கு உள்ள நோய் தடுப்பு திறன் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.


latest tamil news




இந்நிலையில், கோவாக்சின் குறித்து கூடுதல் தகவல்களை வழங்கும்படி, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு உலக சுகாதார நிறுவனம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, கோவாக்சினுக்கு அனுமதி கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202110:43:41 IST Report Abuse
பாமரன் கோவாக்ஸின் டெவலப் செய்ததில் மத்திய அரசு நிறுவனமும் அடங்கும்... மேலும் நம் பிரதமர் கூட கோவாக்ஸின் எடுத்துட்டு அமெரிக்கா கூட போயிட்டு வந்துட்டாப்ல... அங்க கோவாக்சின் பற்றி நாலு வார்த்தை பேசி அப்ரூவல் தர சொல்லியிருக்கலாம்... ஆனால் அங்கே இருக்கறவனை இந்தியாவுக்கு வந்து மருந்து ரெடி பண்ணுங்க பிளீஜ் அப்பிடின்னு சொல்லிட்டு வர்றாப்ல... என்னத்த சொல்ல...🙄🙄
Rate this:
Cancel
Srinivas -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202109:51:48 IST Report Abuse
Srinivas The fact is Covaxin is not as effective as Covishield. Tests have shown that Covishield has an effectiveness of 90 whereas Covaxin only 78.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-செப்-202123:13:25 IST Report Abuse
தமிழவேல் அந்த அனுமதி எதுக்கு ? கோவகசினோடதான் அமெரிக்காவுக்கு 80 பேர் போயிட்டு வந்துட்டாங்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X