உள்ளாட்சி தேர்தல் முடிந்தததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் முடிந்தததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (19)
Share
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‛‛உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்,'' என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தி.மு.க., சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. அப்போது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இந்த தேர்தலில்
தமிழகம், உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்கங்கள், கலைக்கப்படும், அமைச்சர் துரைமுருகன்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‛‛உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்,'' என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தி.மு.க., சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. அப்போது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இந்த தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்தால் வரும் லோக்சபா, சட்டசபை தேர்தலில் கூட நிற்க அவர்களுக்கு தைரியம் வராது. போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.


latest tamil news


தேர்தல் நடந்து முடிந்து மூன்று நாட்களில் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும். புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆவின் சங்கங்களும் கலைக்கப்படும். தேர்தலில் இடம் கிடைக்காதவர்களுக்கு சங்கங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். 32 வாரியங்களும் கலைக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். ஆனால், தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் யாராக இருந்தாலும் அவர்கள் கட்டம் கட்டப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் ஏரி நிரம்பியதால், காங்கேயநல்லுார் ஏரிக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடும் விழா இன்று கழிஞ்சூரில் நடந்தது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தண்ணீரை திறந்து விட்டபின் பேசியதாவது: பாலாற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டதால் கழிஞ்சூர், காட்பாடி ஏரிகள் நிரம்புகிறது. இதனால் இந்த ஏரிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை தீவு ஏற்படுத்தப்பட்டு படகு சவாரி தொடங்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்படும், என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X