பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனம் ரூ.20 கோடி மோசடி? பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

Added : செப் 28, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், நாமக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சேலம், சீலநாயக்கன்பட்டி பி.எம்., நகரில் தனியார் டெய்லரிங் பயிற்சி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டது. அதில் ஸ்பிளஸ்டா கட்டிங் பெயரில், 1-2 லட்ச ரூபாயும், லேசர் கட்டிங் பெயரில், 6-7 லட்ச ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டன.

சேலம்: சேலம், நாமக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சேலம், சீலநாயக்கன்பட்டி பி.எம்., நகரில் தனியார் டெய்லரிங் பயிற்சி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டது. அதில் ஸ்பிளஸ்டா கட்டிங் பெயரில், 1-2 லட்ச ரூபாயும், லேசர் கட்டிங் பெயரில், 6-7 லட்ச ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டன. முதலீடு உறுப்பினர்களுக்கு, வாரந்தோறும் மொத்தமாக துணி வழங்கி அதை கட்டிங் செய்து, சம்பந்தப்பட்ட முகவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்மூலம் மாதம், 30 ஆயிரம் ரூபாய் வரை, வருமானம் ஈட்ட முடிந்தது. சில மாதங்கள் மட்டும், தொடர்ந்து துணி வழங்கிய நிலையில், கடந்த செப்., துவங்கி ஓராண்டாக துணியும் வழங்கவில்லை. முதலீடு பணத்தையும் திருப்பி தராமல், ஏற்றுமதி நிறுவனம் ஏமாற்றி வருகிறது. பலமுறை முறையிட்டும், பணம் கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம், 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X