பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து கலெக்டர், எஸ்.பி.,ஆய்வு

Added : செப் 28, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், வாழப்பாடி பகுதியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து, சேலம் கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை, (29ல்,) காலை, 10:00 மணிக்கு வாழப்பாடியில், வரும்முன் காப்போம் திட்டத்தை துவக்கி வைக்கிறார். 11:00 மணியளவில் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ஆத்தூர் நுகர்பொருள் வாணிப

ஆத்தூர்: ஆத்தூர், வாழப்பாடி பகுதியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து, சேலம் கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை, (29ல்,) காலை, 10:00 மணிக்கு வாழப்பாடியில், வரும்முன் காப்போம் திட்டத்தை துவக்கி வைக்கிறார். 11:00 மணியளவில் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ஆத்தூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகில் உள்ள நவீன சேகோ ஆலையில் ஆய்வு செய்து, சேகோ ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள், முதல்வர் செல்லும் வழிப்பாதை குறித்து நேற்று, சேலம் கலெக்டர் கார்மேகம், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X