பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் இருந்த கொடி கம்பங்கள் அகற்றம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, கே.மோரூரில் கடந்த செப்.,23ல், தடையை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர், பஞ்.,அலுவலகம் முன் கொடிக்கம்பம் நட முயற்சி செய்தனர். அப்போது போலீசார் பாதுகாப்பையும் மீறி, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, கற்கள், பாட்டில், கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதையடுத்து இரு தரப்பிலும், 39 பேர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, ஓமலூர்

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, கே.மோரூரில் கடந்த செப்.,23ல், தடையை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர், பஞ்.,அலுவலகம் முன் கொடிக்கம்பம் நட முயற்சி செய்தனர். அப்போது போலீசார் பாதுகாப்பையும் மீறி, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, கற்கள், பாட்டில், கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதையடுத்து இரு தரப்பிலும், 39 பேர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, ஓமலூர் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கே.மோரூர் பஞ்.,அலுவலகம் அருகே, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, பல்வேறு கட்சி கொடிக்கம்பங்களை அகற்றஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தனர். நேற்று காலை போலீசார், வருவாய்த்துறை முன்னிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு, கொடிக்கம்பம், கொடிமேடை ஆகியவற்றை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X