பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் - எஸ்.எஸ்.ஐ.,மோதல்: உதவி கமிஷனர் விசாரணைக்கு உத்தரவு

Added : செப் 28, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இன்ஸ்பெக்டர் - எஸ்.எஸ்.ஐ., மோதிக்கொண்டது குறித்து, உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.சேலம், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் கந்தவேல் கடந்த, 25 இரவு, 9:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியை மேற்கொண்ட நிலையில், போதை பொருள் விற்பனை வழக்கில் தொடர்புடைய பாலாஜி, 32, என்பவரை பிடித்தார். அவரை ஸ்டேஷனில் வைத்தால், ஓடி விடக்கூடும் என்பதால், இரவு, 10:00

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இன்ஸ்பெக்டர் - எஸ்.எஸ்.ஐ., மோதிக்கொண்டது குறித்து, உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.


சேலம், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் கந்தவேல் கடந்த, 25 இரவு, 9:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியை மேற்கொண்ட நிலையில், போதை பொருள் விற்பனை வழக்கில் தொடர்புடைய பாலாஜி, 32, என்பவரை பிடித்தார். அவரை ஸ்டேஷனில் வைத்தால், ஓடி விடக்கூடும் என்பதால், இரவு, 10:00 மணிக்கு ரோந்து வாகனத்தை பஸ் ஸ்டாண்ட் வரவழைத்து அதில் ஏற்றிச் செல்லும்படி எஸ்.எஸ்.ஐ., தங்கராஜிடம் தெரிவித்துள்ளார். ரோந்து வாகனத்தில் குற்றவாளியை ஏற்றினால், அவரை கண்காணிக்க போலீஸ் ஒருவரை பணிக்கு வழங்கும்படி எஸ்.எஸ்.ஐ.,கேட்டுள்ளார். தன் உத்தரவுக்கு மதிப்பளித்து பாலாஜியை அழைத்துச் செல்லும்படி இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பேசியதை எஸ்.எஸ்.ஐ., தன் மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மொபைல் போனை இன்ஸ்பெக்டர் தட்டிவிடவே, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் நாகராஜூக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர், இருவரிடமும் விசாரணை நடத்தி சமரசம் செய்து வைத்தார். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் நாகராஜூக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இருவரிடமும் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X