சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனல்மின் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி

Added : செப் 28, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையம் முன், தற்கொலை செய்ய போவதாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயியை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையம் அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் ஜெயதேவன், 60. கடந்த, 2004ல், புதிய அனல்மின் நிலையம் கட்டுவதற்காக வாரியம், அவரது ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. நிலம் வழங்கிய பலருக்கு இழப்பீடு மற்றும் வேலை

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையம் முன், தற்கொலை செய்ய போவதாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயியை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையம் அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் ஜெயதேவன், 60. கடந்த, 2004ல், புதிய அனல்மின் நிலையம் கட்டுவதற்காக வாரியம், அவரது ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. நிலம் வழங்கிய பலருக்கு இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜெயதேவன் குடும்பத்திற்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை. அவரது மகனுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரிய மனு, மின்வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது. அவருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்காவிடில், தற்கொலை செய்யபோவதாக கூறி நேற்று காலை, 10:00 மணிக்கு ஜெயதேவன் மண்ணெண்ணெய் கேனுடன் அனல்மின் நிலையம் முன் வந்தார். மேட்டூர் டி.எஸ்.பி., விஜயகுமார், கருமலைக்கூடல் போலீசார் கேனை பிடுங்கி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X