சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையில் மூழ்கி வாலிபர் சாவு

Added : செப் 28, 2021
Share
Advertisement
சேலம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டியை சேர்ந்த அசோகன் மகன் கேசவன், 31. இவர், சேலம் வீராணத்தில் உள்ள உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த, 23ல் சேலம் வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு நண்பர்களுடன் வீராணம் அருகே உள்ள செங்கலனை தடுப்பணைக்கு நண்பர்களுடன் சென்று குளித்துள்ளார். தடுப்பணையின் தண்ணீரில் மூழ்கி சிறிது நேரத்தில்

சேலம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டியை சேர்ந்த அசோகன் மகன் கேசவன், 31. இவர், சேலம் வீராணத்தில் உள்ள உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த, 23ல் சேலம் வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு நண்பர்களுடன் வீராணம் அருகே உள்ள செங்கலனை தடுப்பணைக்கு நண்பர்களுடன் சென்று குளித்துள்ளார். தடுப்பணையின் தண்ணீரில் மூழ்கி சிறிது நேரத்தில் மாயமானார். உடன் சென்ற நண்பர்கள், வீராணம் போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் உடலை தேடி நள்ளிரவு, 1:00 மணிக்கு மீட்டு அரசு மருத்துவமனை பிரேத அறைக்கு அனுப்பி வைத்தனர். வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X