பொது செய்தி

தமிழ்நாடு

சுவாமி சிலை சேதம்; புகார் மனு

Added : செப் 28, 2021
Share
Advertisement
தர்மபுரி: சிவன் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, இந்து மக்கள் கட்சியினர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் மலை மீது, பழமையான சிவன் கோவில் உள்ளது. சிலநாட்களுக்கு முன், இக்கோவிலின் பூட்டை சிலர் உடைத்துள்ளனர். கோவில் உள்ளே இருந்த சிவன் சிலையை,

தர்மபுரி: சிவன் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, இந்து மக்கள் கட்சியினர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் மலை மீது, பழமையான சிவன் கோவில் உள்ளது. சிலநாட்களுக்கு முன், இக்கோவிலின் பூட்டை சிலர் உடைத்துள்ளனர். கோவில் உள்ளே இருந்த சிவன் சிலையை, தரையிலிருந்து பெயர்க்க முற்சித்ததால், சிலை சேதமாகியுள்ளது. கோவிலின் முன் பகுதியிலிருந்த பைரவர் சிலையையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். சிறப்பு வாய்ந்த மலைகோவில் சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X