பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் தொற்று பரவலால் பெற்றோர் அச்சம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கடகத்தூர் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கடந்த, ஒரு வாரத்துக்கு முன் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு கொரோனா உறுதியானதால் கடந்த, 25ல் அப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்ததில், ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானது. பள்ளிக்கு கிருமிநாசினி தெளித்த நிலையிலும், பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தால் நேற்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவில்லை. பள்ளிக்கு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த கடகத்தூர் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கடந்த, ஒரு வாரத்துக்கு முன் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு கொரோனா உறுதியானதால் கடந்த, 25ல் அப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்ததில், ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானது. பள்ளிக்கு கிருமிநாசினி தெளித்த நிலையிலும், பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தால் நேற்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவில்லை. பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில், நான்கு ஆசிரியர்கள், இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இது குறித்து, தர்மபுரி சி.இ.ஓ., கணேஷ்மூர்த்தியை அவரது மொபைல்போனை தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X