பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல்

Added : செப் 28, 2021
Share
Advertisement
தர்மபுரி: அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன், சாலை மறியல் போரா ட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். இதில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்

தர்மபுரி: அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன், சாலை மறியல் போரா ட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். இதில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. போராட்ட ஒருங்கிணைப்பாளர், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் மணி, எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் சண்முகராஜா, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சென்னகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதோ கோரிக்கைகளை வலியுறுத்தி, நல்லம்பள்ளியிலும் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம், 196 பேரை போலீசார் கைது செய்தனர்.

* கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 83 பேரை போலீசார் கைது செய்தனர்.


* கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் தி.மு.க., மற்றும் தொ.மு.ச சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச., பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.


* ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊத்தங்கரையில், 70 பேர், அரூர், 60, பாப்பிரெட்டிப்பட்டி, 47, பென்னாகரம், 55, பாப்பாரப்பட்டியில், 97 பேர் கைது செய்யப்பட்டனர். போச்சம்பள்ளியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X