பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை அரசு மேம்படுத்த வேண்டும்; ஜி.கே.மணி

Added : செப் 28, 2021
Share
Advertisement
பென்னாகரம்: ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டதையடுத்து நேற்று பென்னாகரம் எம்.எல்.ஏ.,வும், பா.ம.க., தலைவருமான ஜி.கே.மணி, பரிசல் துறையில், பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சுற்றுலா பயணிகள், வணிகர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டதையடுத்து நேற்று பென்னாகரம் எம்.எல்.ஏ.,வும், பா.ம.க., தலைவருமான ஜி.கே.மணி, பரிசல் துறையில், பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சுற்றுலா பயணிகள், வணிகர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை அரசு மேம்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. இங்கு, செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க, முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் பேசி வழிவகை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அப்போது, தர்மபுரி, எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சேர்மேன் கவிதா ராமக்கிருஷ்ணன், ஏரியூர் சேர்மேன் பழனிசாமி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X