பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் இல்லாததால் வேட்புமனு தள்ளுபடி

Added : செப் 28, 2021
Share
Advertisement
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குட்லானஹள்ளி பஞ்., தலைவர் பதவி பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த முனியம்மாள், 53, சிவந்தி, 33, தின்னகுட்லஹள்ளியை சேர்ந்த ராணி, 23 ஆகியோர் பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த, 23ல் மனுக்கள் பரிசீலனையில், அவர்கள் விண்ணப்பத்தில், பழங்குடியினர், எஸ்.டி., என்பதற்கான ஜாதி சான்றிதழ்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குட்லானஹள்ளி பஞ்., தலைவர் பதவி பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த முனியம்மாள், 53, சிவந்தி, 33, தின்னகுட்லஹள்ளியை சேர்ந்த ராணி, 23 ஆகியோர் பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த, 23ல் மனுக்கள் பரிசீலனையில், அவர்கள் விண்ணப்பத்தில், பழங்குடியினர், எஸ்.டி., என்பதற்கான ஜாதி சான்றிதழ் இல்லாததால், அவர்களின் வேட்புமனு தள்ளுபடியானது. இதனால், குட்லானஹள்ளி பஞ்., தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், பழங்குடியின மக்கள் அடிப்படை வசதியின்றி வசிக்கின்றனர். மேலும், பழங்குடியினர் சான்றிதழ் இல்லாமல், மாணவர்கள் மேல்படிப்பை தொடர முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி கூலிவேலைக்கு செல்கின்றனர். எனவே, இவர்களும் சமூகத்தில் மதிக்கத் தக்கவர்களாக வர, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X