சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை அடித்து கொன்ற கட்டட மேஸ்திரிக்கு ஆயுள்

Added : செப் 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மனைவியை அடித்து கொன்ற கட்டட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி ராஜாஜி நகர், ஆறாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் முனியப்பன், 60, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி அமுதா, 45; தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது. கடந்த, 2017 ஜூலை, 31ல் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முனியப்பன், கட்டையால்

கிருஷ்ணகிரி: மனைவியை அடித்து கொன்ற கட்டட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி ராஜாஜி நகர், ஆறாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் முனியப்பன், 60, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி அமுதா, 45; தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது. கடந்த, 2017 ஜூலை, 31ல் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முனியப்பன், கட்டையால் சரமாரியாக தாக்கியதில், அமுதா சம்பவ இடத்திலேயே பலியானார். இக்கொலை தொடர்பாக அப்போதைய கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ரவிக்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி ஆகியோர், முனியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா, குற்றம் சாட்டப்பட்ட முனியப்பனுக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X