பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் தொட்டி இல்லாவிட்டால் குடிநீர் கட்; ஓசூர் கமிஷனர் அறிவிப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டடங்களிலும், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழைநீரை சேமிக்க ஏதுவாக, மழைநீர் சேகரிப்பு தொட்டி புனரமைப்பு பணியை கண்காணிக்கும் பணி, மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டடங்களிலும், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழைநீரை சேமிக்க ஏதுவாக, மழைநீர் சேகரிப்பு தொட்டி புனரமைப்பு பணியை கண்காணிக்கும் பணி, மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள, 200 பணியாளர்களை உள்ளடக்கிய, ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு வீடு, வீடாக சென்று, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, உகந்ததாக உள்ளதா என, ஆய்வு செய்கின்றனர். மழைநீர் சேகரிப்பு தொட்டியை புனரமைப்போ அல்லது புதிதாக அமைக்க வேண்டியிருந்தாலோ, ஏழு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்படாததற்கு அபராதம் விதித்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X