பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மரணம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: கலவை அருகே, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மாரடைப்பால் இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கலவை அடுத்த நாகலேரி ஊராட்சியில், 250க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். 750 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்திராணி, ஆதிலட்சுமி, மங்கை ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.

ராணிப்பேட்டை: கலவை அருகே, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மாரடைப்பால் இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கலவை அடுத்த நாகலேரி ஊராட்சியில், 250க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். 750 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்திராணி, ஆதிலட்சுமி, மங்கை ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். அதில், இந்திராணிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் ஆட்டோவில் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் கால்வலி காரணமாக, வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சையளித்தும் நேற்று காலை இந்திராணி, 57, இறந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர், கலவையில் உள்ள நில் குயின் மேரிஸ் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதையடுத்து இவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X