பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்: டி.எஸ்.பி.,பங்கேற்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாமை டி.எஸ்.பி., துவங்கி வைத்தார். குமாரபாளையம், பவானி ரோட்டரி சங்கம், அர்னவ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை சார்பில் எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாம் குமாரபாளையத்தில் நடந்தது. தலைவர் ஜீவா சித்தையன் தலைமை வகித்தார். ஈரோடு டி.எஸ்.பி. சண்முகம் முகாமினை துவக்கி வைத்தார். எலும்பு கனிம அடர்த்தி சோதனை, ரத்த

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாமை டி.எஸ்.பி., துவங்கி வைத்தார். குமாரபாளையம், பவானி ரோட்டரி சங்கம், அர்னவ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை சார்பில் எலும்பு மூட்டு இலவச பரிசோதனை முகாம் குமாரபாளையத்தில் நடந்தது. தலைவர் ஜீவா சித்தையன் தலைமை வகித்தார். ஈரோடு டி.எஸ்.பி. சண்முகம் முகாமினை துவக்கி வைத்தார். எலும்பு கனிம அடர்த்தி சோதனை, ரத்த சர்க்கரையளவு, கால் மூட்டு மற்றும் தோள் பட்டை வலி, கழுத்து, முதுகு மற்றும் தண்டுவட வலி, மூட்டு தேய்மானம், ஜவ்வு பிரச்னை, எலும்பு முறிவு, மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகளுக்கு டாக்டர் நரேஷ் தனக்கோடி ஆலோசனை வழங்கினார். இதில், 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X