பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி: ப.வேலூரில் 7 பேருக்கு தங்கம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
ப.வேலூர்: நேபாளத்தில் நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் ப.வேலூர் பகுதியை சேர்ந்த ஏழு மாணவ, மாணவியர் தங்கப்பதக்கம் பெற்றனர். நேபாளத்தில் சர்வதேச சாம்பியன்ஷிப், 2020 - 21 போட்டி நடந்தது. ப.வேலூர் பகுதியை சேர்ந்த பொத்தனூர், ப.வேலூர் மற்றும் பாண்டமங்கலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் சிலம்பம், பாக்சிங், கிக் பாக்சிங், தேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளில் தங்கப்

ப.வேலூர்: நேபாளத்தில் நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் ப.வேலூர் பகுதியை சேர்ந்த ஏழு மாணவ, மாணவியர் தங்கப்பதக்கம் பெற்றனர். நேபாளத்தில் சர்வதேச சாம்பியன்ஷிப், 2020 - 21 போட்டி நடந்தது. ப.வேலூர் பகுதியை சேர்ந்த பொத்தனூர், ப.வேலூர் மற்றும் பாண்டமங்கலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் சிலம்பம், பாக்சிங், கிக் பாக்சிங், தேக்வாண்டோ உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை பெற்றனர். 14 வயதுக்குட்பட்ட சிலம்பம் தனித்திறமை போட்டியில், 35 - 40 கிலோ எடைப்பிரிவில் ரம்யா; 45 - 50 கிலோ எடைப் பிரிவில் இனியா; 14 வயதுக்குட்பட்ட தொடுமுறை போட்டியில், 55 - 60 கிலோ எடைப்பிரிவில் ஜெயஸ்ரீ; 17 வயதுக்கு உட்பட்ட, 60 - 65 கிலோ எடை பிரிவில் ஹேமலதா; 15 வயதுக்குட்பட்ட கிக் பாக்சிங் போட்டியில், 40 - 45 கிலோ எடைப் பிரிவில் ஹேமாவதி; 14 வயதுக்கு உட்பட்ட, 35 - 40 கிலோ எடைப்பிரிவில் கிஷோர்; தேக்வாண்டோ போட்டியில், 15 வயதுக்கு உட்பட்டோர், 40 - 45 கிலோ எடைப் பிரிவில் கோபிகா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். பாக்சிங் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட, 45 - 50 கிலோ எடைப்பிரிவில் தாட்சாயணி இரண்டாமிடம் பெற்றார். பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர், பயிற்சியாளர் ரவிக்குமாரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X