பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா

Added : செப் 28, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக கூடுதல் பணி ஊதியம் வழங்கப்படவில்லை என

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக கூடுதல் பணி ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் பணியாற்றும் இதர தூய்மைப் பணியாளர்கள் நேற்று மாலை, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பணிக்காக, 100 பேர் வரை நியமிக்கப்பட்டனர். அவர்கள் பணி நேரத்தை கடந்து கூடுதலாக பணியாற்றியதற்கு ஊதியம் கேட்கின்றனர். இதற்கும் மருத்துவமனைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X