பொது செய்தி

தமிழ்நாடு

'திருச்செங்கோடு கல்லூரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை'

Added : செப் 28, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: ''திருச்செங்கோடு கலை கல்லூரி அமைக்கப்பட்டு நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்,'' என, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறினார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், தன், 100 நாள் தொகுதி பணிகள் குறித்த தொகுப்பினை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: மேட்டூர் அணையில் நீர் நிரம்பும் போது அந்த உபரி நீரை திருமணிமுத்தாறுக்கு திருப்பி

திருச்செங்கோடு: ''திருச்செங்கோடு கலை கல்லூரி அமைக்கப்பட்டு நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்,'' என, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறினார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், தன், 100 நாள் தொகுதி பணிகள் குறித்த தொகுப்பினை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: மேட்டூர் அணையில் நீர் நிரம்பும் போது அந்த உபரி நீரை திருமணிமுத்தாறுக்கு திருப்பி விடும் திட்டம், 10 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் நிறைவேற்றப்படும். திருச்செங்கோடு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடக்கும். திருச்செங்கோட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் வசதிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கொ.ம.தே.க., மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், திருச்செங்கோடு நகர்மன்ற நகர்மன்ற முன்னாள் தலைவர் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X