பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9,000 கன அடியாக அதிகரிப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு, 9,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல்

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு, 9,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 9,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X