டீக்கடை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டீக்கடை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

Added : செப் 28, 2021
Share
கோபி: கோபி அருகே, டீக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். ஈரோடு மாவட்டம், கோபி, சாய் அபிராமி நகரை சேர்ந்தவர் துரைராஜ், 62, டீக்கடை உரிமையாளர். இவரது மனைவி தேன்மொழி, 55. இவர்களது மகன் விஜயக்குமார், 35. நேற்று முன்தினம் குடும்பத்துடன், குன்னத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு துரைராஜ் சென்றார். இரவு, 8:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது

கோபி: கோபி அருகே, டீக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். ஈரோடு மாவட்டம், கோபி, சாய் அபிராமி நகரை சேர்ந்தவர் துரைராஜ், 62, டீக்கடை உரிமையாளர். இவரது மனைவி தேன்மொழி, 55. இவர்களது மகன் விஜயக்குமார், 35. நேற்று முன்தினம் குடும்பத்துடன், குன்னத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு துரைராஜ் சென்றார். இரவு, 8:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை, மர்ம நபர்கள் ஆயுதத்தால் நெம்பி உள்ளே புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. பீரோவில் வைத்திருந்த, 12 பவுன் நகை களவு போனதாக துரைராஜ் தெரிவித்தார். கோபி போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X