காவிரி, நொய்யலில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி, நொய்யலில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க எதிர்பார்ப்பு

Added : செப் 28, 2021
Share
கரூர்: வட கிழக்கு பருவமழை பெய்ய துவங்கிய நிலையில், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நொய்யல் ஆறு உருவாகி, திருப்பூர் மாவட்டம் வழியாக பாய்ந்து கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரியில் கலக்கிறது. இதனால், கோவை, திருப்பூர், கரூர்

கரூர்: வட கிழக்கு பருவமழை பெய்ய துவங்கிய நிலையில், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நொய்யல் ஆறு உருவாகி, திருப்பூர் மாவட்டம் வழியாக பாய்ந்து கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரியில் கலக்கிறது. இதனால், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 75 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருகிய சாயப்பட்டறைகளால் நொய்யல் பாதிக்கப்பட்டது. ஆற்றில் சாயக்கழிவு கலந்து விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், நொய்யல், அஞ்சூர், துக்காச்சி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டது. சாயக்கழிவை கட்டுப்படுத்தகோரி, பல்வேறு விவசாய சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை, பல சாயப்பட்டறைகள் பின்பற்றாத காரணத்தால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தொடர்ந்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரும் சாயக்கழிவு, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால் டெல்டா மாவட்டம் மட்டுமல்ல, வீராணம் ஏரி மூலம் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் சென்னை நகர மக்களுக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்படும். இதனால் சாயக்கழிவு விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சாயக்கழிவு பாதிப்பிலிருந்து நொய்யல், காவிரியாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும், மேட்டூர் அணை, பவானி சாகர் அணை மற்றும் அமராவதி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவ மழையும், திருப்திகரமாக துவங்கியுள்ளது. இதனால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தண்ணீர் கலந்து கரூர் மாவட்டத்துக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நொய்யல் ஆறு மூலம் காவிரியாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். இல்லையென்றால், கரூர் மாவட்டத்தில் தண்ணீர் இருந்தும் விவசாயம் பொய்த்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X