பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு குறைப்பால் நீர்மட்டம் உயர்வு

Added : செப் 28, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 22ல் அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 22ல் அணை நீர்மட்டம், 51 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. நேற்று முன்தினம் அணைக்கு, 598 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று, 475 கன அடியாக குறைந்தது. நேற்று முன்தினம் அணையிலிருந்து, 408 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று, 347 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 1.66 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கலாம். நேற்று காலை அணை நீர்மட்டம், 51.05 அடியாகவும், நீர் இருப்பு, 1.55 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X