லாரி தகுதி சான்றிதழ் புதுப்பிக்க கால அவகாசம்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாரி தகுதி சான்றிதழ் புதுப்பிக்க கால அவகாசம்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

Added : செப் 28, 2021
Share
சேலம்: ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு சகஜ நிலைக்கு திரும்பாததால், லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய, கால அவகாசத்தை வரும் டிச.,31 வரை நீட்டிக்க, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு பொருளாளர் தன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா முதல், இரண்டாவது அலையை தடுக்க

சேலம்: ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு சகஜ நிலைக்கு திரும்பாததால், லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய, கால அவகாசத்தை வரும் டிச.,31 வரை நீட்டிக்க, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு பொருளாளர் தன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா முதல், இரண்டாவது அலையை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், லாரி தொழில் கடும் நசிவை சந்தித்துள்ளது. தற்போது சகஜ நிலை திரும்பிய போதிலும், தொழிற்சாலைகள் முழுமையாக இயங்காததால், 1.50 லட்சம் லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு, தேசிய, மாநில அனுமதி பெறுதல் உட்பட்ட மத்திய, மாநில போக்குவரத்து துறையில் ஆவணங்களை பெறுவதற்கான காலம் செப்.,30 வரை வழங்கப்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சான்றிதழ்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிச.,31 வரை நீட்டிக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X