பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : செப் 28, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலையில் சோதனையை துவக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை தொடர்ந்தனர். சேலம், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு பணம் வசூலிப்பதாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜூக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை, 5:45 மணிக்கு

சேலம்: சேலம், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலையில் சோதனையை துவக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை தொடர்ந்தனர். சேலம், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு பணம் வசூலிப்பதாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜூக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை, 5:45 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்து, சோதனையை துவக்கினர். நள்ளிரவை தாண்டியும் சோதனை தொடர்ந்தது. இரவு, 9:30 மணி நிலவரப்படி கணக்கில் வராத பணம், 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஆவணங்கள், வசூல் குறித்த டைரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து சார்பதிவாளர் இந்துமதி உட்பட ஆறு பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவை தாண்டியும் சோதனை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X