சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் மூழ்கிய சகோதரர்களின் சடலம் மீட்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர், பாலாற்று வெள்ளத்தில் மூழ்கிய அண்ணன், தம்பியின் உடல்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், இரண்டு நாட்களுக்கு பின் நேற்று மீட்டனர்.வேலூர், விருதம்பட்டு காளியம்மன் தோப்பை சேர்ந்தவர் பாபு, 50, பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்கிறார். இவர் மகன்கள் முபாரக், 18, ஜாகீர், 17. இவர்கள் தன் நண்பர்களோடு, நேற்று முன்தினம் மதியம் தண்டல கிருஷ்ணாபுரம் பாலாற்றில் குளித்துக்

வேலூர்: வேலூர், பாலாற்று வெள்ளத்தில் மூழ்கிய அண்ணன், தம்பியின் உடல்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், இரண்டு நாட்களுக்கு பின் நேற்று மீட்டனர்.
வேலூர், விருதம்பட்டு காளியம்மன் தோப்பை சேர்ந்தவர் பாபு, 50, பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்கிறார். இவர் மகன்கள் முபாரக், 18, ஜாகீர், 17. இவர்கள் தன் நண்பர்களோடு, நேற்று முன்தினம் மதியம் தண்டல கிருஷ்ணாபுரம் பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது முபாரக்கும், தம்பி ஜாகீரும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கினர். வேலூர், காட்பாடி தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் ஆற்றில் மூழ்கியவர்களை இரவு, 7:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை, 6:00 மணியில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் அவர்களை தேடி மாலை, 4:30 மணிக்கு அவர்களை இறந்த நிலையில் மீட்டனர். காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X