பொது செய்தி

இந்தியா

புயல்களையும், கொரோனாவையும் சிறப்பாக கையாண்ட இந்தியா: அமித்ஷா பெருமிதம்!

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தாக்கத்தை இந்தியா திறம்பட கையாண்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டைத் தாக்கிய இரண்டு புயல்களையும் இந்தியா கச்சிதமாக கையாண்டு உள்ளதாக கூறியுள்ளார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அரசு கொரோனா தாக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி விநியோகம் ஒருபுறம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில்
அமித்ஷா, புயல், கொரோனா, amitshah, covid, corona,

புதுடில்லி: கொரோனா தாக்கத்தை இந்தியா திறம்பட கையாண்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டைத் தாக்கிய இரண்டு புயல்களையும் இந்தியா கச்சிதமாக கையாண்டு உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அரசு கொரோனா தாக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி விநியோகம் ஒருபுறம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு வெகுவாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் படிப்படியாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா பேசியதாவது: பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைவிட இந்தியாவில் குறைவான வளங்கள் இருந்தும் வைரஸ் தாக்கத்தை மத்திய அரசு திறம்பட கையாண்டு உள்ளது. வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி கடந்த மார்ச் 11-ஆம் தேதி துவங்கி தற்போது வரை 20 ஆயிரம் புதிய வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் மட்டுமே உருவாகியுள்ளது.

கடந்த 192 நாட்களாக தினசரி வைரஸ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. தினசரி நாடு முழுவதும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்படுகின்றனர்.


latest tamil newsகொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் யாஸ் மற்றும் டாஸ்டே புயல்கள் இந்திய தேசத்தை தாக்கின. அதனையும் மத்திய அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. மின் பற்றாக்குறை காரணமாக நமது தேசம் எந்த உயிரையும் இழக்கவில்லை. ரயில்களில் கொண்டுசெல்லப்பட்ட ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களில் இருந்து ஆக்சிஜன் கசிவு இன்றுவரை ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202122:14:53 IST Report Abuse
Venugopal Subramanian 0 ....
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-செப்-202121:29:18 IST Report Abuse
Dhurvesh மோடி அமெரிக்கா செல்வதற்கு முன் தொடங்கி, அவர் நாடு திரும்பியது வரை இந்திய செய்தி சேனல்கள் அனைத்திலும் அந்நிகழ்வே முதன்மை பெற்றிருந்தது. ஆனால், இதற்கு முன்னிருந்தது போலல்லாமல் இம்முறை அமெரிக்க ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு முன்னிலை அளிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் வெளியுறவுச் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், இந்தியாவில் நிலவிவரும் சூழல் குறித்த பிற நாடுகளின் எண்ணவோட்டத் தொகுப்பாகவும் இதனைக் கருத வேண்டியிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையின்போது இந்தியாவில் தொற்றுக்குப் பலியானவர்கள் கொத்துகொத்தாக எரியூட்டப்பட்டனர் என்ற செய்தி உலகம் முழுவதும் தீயாகப் பரவியது உள்ளிட்ட சில நிகழ்வுகள் இந்தப் பாராமுகத்துக்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்க்ள் கருதுகிறார்கள்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
28-செப்-202120:11:28 IST Report Abuse
J. G. Muthuraj ஒரு இசையமைப்பாளர் அவர் இசைத்த பாடல்களின் அனைத்து அம்சங்களும் தனக்கே சொந்தமானது என்றே பெருமை கொள்பவர்.... ஒரு மேடை கச்சேரியில், நடிகர் கமலிடம் அவர் சற்று முரட்டுத்தனமாக அவ்வாறு கூற, கமல் "எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கோங்க....எங்களுக்கும் கொஞ்சம் விட்டுவையுங்களேன்" என்று கூறி அவரது மூக்க உ டைப்பார்....அநேகர் விழுந்து விழுந்து சிரிக்க இசையமைப்பாளரூம் செய்வதறியாது சிரித்து சமாளிப்பர்....பிற மாநில அரசுகள் அங்குள்ள மருத்துவ சேவை பட்டாளங்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து கோவிட் பரவல் நோயை விரட்டி அடித்தார்கள்.....தொண்ணூறு சதவிகித பெருமை அவர்களைத்தான் சென்றடையவேண்டும்.....இந்தியாவின் எந்த மூலையில் நல்லகாரியம் நிகழ்த்தப்பட்டாலும் அதற்கு கிரெடிட் எஜமானனாகிய மத்திய அரசுக்கா?...கூட்டாட்சியின் மற்ற அங்கங்களையும் உங்களோடு இணைத்து சிந்திக்கும் நல்ல பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.....அதுதான் இந்தியாவின் பலமாக இருக்கும்......
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-செப்-202123:10:13 IST Report Abuse
தமிழவேல் அவுங்களுக்குத்தான் கைத்தட்டிட்டாங்களே.....
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
29-செப்-202100:03:39 IST Report Abuse
வால்டர்சகிப்புத்தன்மை கற்றுக்கொள்ள சொல்லுங்க ஜி. காங்கிரஸ் செய்த சாதனை. கட்டுமான அமைப்புகள், ரயில்வே தளவாடங்கள் எல்லாம் அவங்க போட்டதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X