புயல்களையும், கொரோனாவையும் சிறப்பாக கையாண்ட இந்தியா: அமித்ஷா பெருமிதம்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புயல்களையும், கொரோனாவையும் சிறப்பாக கையாண்ட இந்தியா: அமித்ஷா பெருமிதம்!

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: கொரோனா தாக்கத்தை இந்தியா திறம்பட கையாண்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டைத் தாக்கிய இரண்டு புயல்களையும் இந்தியா கச்சிதமாக கையாண்டு உள்ளதாக கூறியுள்ளார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அரசு கொரோனா தாக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி விநியோகம் ஒருபுறம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில்
அமித்ஷா, புயல், கொரோனா, amitshah, covid, corona,

புதுடில்லி: கொரோனா தாக்கத்தை இந்தியா திறம்பட கையாண்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டைத் தாக்கிய இரண்டு புயல்களையும் இந்தியா கச்சிதமாக கையாண்டு உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அரசு கொரோனா தாக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி விநியோகம் ஒருபுறம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு வெகுவாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் படிப்படியாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா பேசியதாவது: பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைவிட இந்தியாவில் குறைவான வளங்கள் இருந்தும் வைரஸ் தாக்கத்தை மத்திய அரசு திறம்பட கையாண்டு உள்ளது. வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. சமீபத்திய ஆய்வு அறிக்கையின் படி கடந்த மார்ச் 11-ஆம் தேதி துவங்கி தற்போது வரை 20 ஆயிரம் புதிய வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் மட்டுமே உருவாகியுள்ளது.

கடந்த 192 நாட்களாக தினசரி வைரஸ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. தினசரி நாடு முழுவதும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்படுகின்றனர்.


latest tamil news



கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் யாஸ் மற்றும் டாஸ்டே புயல்கள் இந்திய தேசத்தை தாக்கின. அதனையும் மத்திய அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. மின் பற்றாக்குறை காரணமாக நமது தேசம் எந்த உயிரையும் இழக்கவில்லை. ரயில்களில் கொண்டுசெல்லப்பட்ட ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களில் இருந்து ஆக்சிஜன் கசிவு இன்றுவரை ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X