அமிர்தசரஸ்: பஞ்சாப் அரசியலில் குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (செப்.28) அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மாநில காங்., பொது செயலர் யோகிந்தர் திங்ரா ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனால், பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார்.
இந்த சூழ்நிலையில் இன்று காங்., தலைவர் பதவியை சித்து இன்று (செப்.28) திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்துவுக்கு ஆதரவாக ராஸியா சுல்தானா என்பவர் அமைச்சரவையில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்த சரண்ஜித்சிங் சன்னி அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா ஏற்க மறுப்பு
பஞ்சாப் காங்., தலைவர் பதவியை நவ்ஜோத்சிங் சித்து ராஜினாமா செய்திருந்த நிலையில் அவருடைய ராஜினாமாவை காங்., மேலிடம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE