பொது செய்தி

தமிழ்நாடு

14 கி.மீ.,தூரம் நடந்து மலை கிராமத்திற்கு சென்று குறை கேட்ட கலெக்டர்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாணியம்பாடி:14 கி.மீ., துாரம் நெக்னாமலைக்கு நடந்து சென்ற கலெக்டர் அமர்குஷ்வாஹா மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்தை சேர்ந்த நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்திற்கு செல்ல கடந்த ஆட்சியில் 14 கி.மீ., துாரம் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் அந்த சாலை முழுவதும்

வாணியம்பாடி:14 கி.மீ., துாரம் நெக்னாமலைக்கு நடந்து சென்ற கலெக்டர் அமர்குஷ்வாஹா மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்தை சேர்ந்த நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்திற்கு செல்ல கடந்த ஆட்சியில் 14 கி.மீ., துாரம் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.



latest tamil news




கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் அந்த சாலை முழுவதும் பாழடைந்து விட்டது. இதனால் மலைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பழையபடி இப்பகுதி மக்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி துாக்கிக் கொண்டு மலையடிவாரத்திற்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையறிந்த மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அதிகாரிகளுடன் நெக்னாமலைக்கு 14 கி.மீ., துாரம் நடந்து சென்று அங்குள்ள மலைவாழ் மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.அங்கு வசிக்கும் 82 பேருக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் தலா ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் மெத்தம் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.


latest tamil news




அப்போது கழிவறைகள் கட்ட 80 பேருக்கு தலா 12,500 ரூபாய் வழங்குவதற்கான உத்தரவை வழங்கிய கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில், குடிநீர், சாலை வசதி விரைவில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் கூறினார்.

பின்னர் இப்பகுதி மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வாணியம்பாடி ஆர்.டி.ஓ., காயத்திரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
28-செப்-202122:43:19 IST Report Abuse
Soumya நம்ம விடியலு வயல் வெளியில் தார் ரோடு போட்டு நடப்பாரூ பாருங்க கொள்ளை அழகா இரிக்கும் சைக்கிள்ல உலா வருவாரு பாருங்க சிப்பு சிப்பா வரும்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
28-செப்-202122:40:42 IST Report Abuse
a natanasabapathy சென்ற ஆட்சியில் இந்த ஆட்சியர்கள் எல்லாம் எங்கு இருந்தனர் ஒருவர் 14 கி மீ நடந்து சென்று குறை கேட்கிறார் ஒருவர் மனைவியுடன் வயலில் இரங்கி நடவு செய்கிறார் ஆட்சி மாறியவுடன் கட்சிக்காரர்களை போல் ஸ்டண்ட் அடிக்கின்றனர்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
28-செப்-202120:50:09 IST Report Abuse
தமிழ்வேள் இந்த அளவுக்கு வேகமாக, சுறுசுறுப்பாக வேலைபார்த்தால் , திருட்டு திமுக அடிமைகளுக்கு பிடிக்காதே ...கூடிய சீக்கிரம் ஏதாவது டம்மி போஸ்டுக்கு டிரான்ஸபர் உறுதி ...தமிழாண்டாவ் ...திமுக டாவ் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X