30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., 30ல் இடைத்தேர்தல்| Dinamalar

30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., 30ல் இடைத்தேர்தல்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021
Share
புதுடில்லி : 'காலியாக உள்ள மூன்று லோக்சபா தொகுதிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்., 30 நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தலைமை தேர்தல் ஆணையம் இன்று (செப்.28) வெளியிட்டுள்ள அறிவிப்பு:மத்திய பிரதேசத்தின் கந்த்வா, ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர்ஹாவேலி ஆகிய மூன்று
30 சட்டசபை, தொகுதி, அக்., 30ல், இடைத்தேர்தல்

புதுடில்லி : 'காலியாக உள்ள மூன்று லோக்சபா தொகுதிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்., 30 நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையம் இன்று (செப்.28) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மத்திய பிரதேசத்தின் கந்த்வா, ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர்ஹாவேலி ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் அக்., 30ல் இடைத்தேர்தல் நடத்தப்படும்.சிக்கிம் 5; மேற்கு வங்கம் 4; மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 சட்டசபை தொகுதிகளுக்கும், அக்., 30ல் இடைத்தேர்தல் நடத்தப்படும்.


latest tamil news



பீஹார், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆந்திரா, ஹரியானா, மஹாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆகிய மாநிலங்களில் தொகுதிகளுக்கும் அதே தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

நவ., 2ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X