காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாக்., பயங்கரவாதி கைது

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (5+ 8)
Share
Advertisement
காஷ்மீரின் யுரி பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, 19 வயது பயங்கரவாதி பிடிபட்டார். அதே நேரத்தில் மற்றொரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது: காஷ்மீரின் யுரி செக்டரில் ஒரு பயங்கரவாதி துப்பாக்கியால் சுட முயன்றார். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவருடன் வந்தவர்
காஷ்மீர், ஊடுருவ, முயன்ற, பாக்., பயங்கரவாதி, கைது

காஷ்மீரின் யுரி பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, 19 வயது பயங்கரவாதி பிடிபட்டார். அதே நேரத்தில் மற்றொரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது: காஷ்மீரின் யுரி செக்டரில் ஒரு பயங்கரவாதி துப்பாக்கியால் சுட முயன்றார். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவருடன் வந்தவர் சரணடைந்தார்.விசாரணையில், அவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அலி பாபர் பத்ரா,19 என்ற அந்த இளைஞர், குடும்பத்தின் வறுமையால் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக கூறினார்.


latest tamil news



கடந்த 2019ல் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், பயிற்சி அளித்தவர்களில் பெரும்பாலானோர் பாக்., ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202110:37:19 IST Report Abuse
Vignesh Babu இவன் ஒரு ஆதாரம் தான்.பாகிஸ்தான் ஒரு தீவிரவாதி நாடுனு நிருபிக்க.
Rate this:
Cancel
29-செப்-202110:22:50 IST Report Abuse
சங்கிமக்கா பேச்சே கூடாது.. இவனை எல்லாம்...
Rate this:
Cancel
28-செப்-202120:57:39 IST Report Abuse
theruvasagan குடும்பத்துல வறுமை என்றால் கூலி வேலைக்கு போகலாம். ஆனல் இந்த மூர்க்கன் குண்டு வைக்கிறேன்னு கிளம்பிட்டான் பாருங்க. அதுதானே பக்கீஸ் பரம்பரை தொழில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X