சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

முதல்வர் பதவி மீண்டும் கிடைக்குமா?

Added : செப் 28, 2021
Share
Advertisement
முதல்வர் பதவி மீண்டும் கிடைக்குமா?'சட்டசபை தேர்தலுக்குப் பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என, உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினரிடையே இப்போது முணுமுணுப்பு எழுந்துள்ளது. இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது; அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா காலத்தில், யோகி ஆதித்யநாத்தின் பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என

அக்கம் பக்கம்


முதல்வர் பதவி மீண்டும் கிடைக்குமா?



'சட்டசபை தேர்தலுக்குப் பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என, உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினரிடையே இப்போது முணுமுணுப்பு எழுந்துள்ளது. இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது; அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா காலத்தில், யோகி ஆதித்யநாத்தின் பணிகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறப்பட்டதால், முதல்வர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படலாம் என கூறப்பட்டது.
ஆனால், டில்லியில் முகாமிட்ட ஆதித்யநாத், கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசி, சமாதானப்படுத்தி முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆனாலும், அவரது முதல்வர் நாற்காலிக்கு மேல் ஒரு கத்தி தொங்கியபடியே உள்ளது. உ.பி., அமைச்சரவை சமீபத்தில் விரிவு படுத்தப்பட்டது. இதில் காங்கிரசிலிருந்து வந்த, ஜிதின் பிரசாதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர், உ.பி.,யில் குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடம் செல்வாக்கு பெற்றவர். சுறுசுறுப்பான இளைஞர்; கட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இவரது செயல்பாடு, பா.ஜ., தலைவர்களை கவர்ந்து விட்டது. இதனால், 'தேர்தல் முடிந்து பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்தால் முதல்வர் பதவி ஆதித்யநாத்துக்கு கிடைக்குமா அல்லது ஜிதின் பிரசாதா போன்ற இளைஞர் வசம் செல்லுமா' என, உ.பி.,யில் பேச்சு அடிபடுகிறது.
இந்தத் தகவல் ஆதித்யநாத்துக்கு எட்டியதும், 'அப்படிக் கூட நடக்க வாய்ப்பு உள்ளதா...' என தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X