சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்துவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல மாநிலங்களில் முழுமையாக 'பந்த்' நடந்துள்ளது. மோடி அரசு, நினைத்ததை எல்லாம் செய்து மக்கள் வாழ்வை படுகுழியில் தள்ள அனுமதிக்க மாட்டோம். அரசு புரிந்துக் கொள்ள மறுத்தால், போராட்டங்கள் தீவிரமாகும்.'டவுட்' தனபாலு: இது

'டவுட்' தனபாலு

மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்துவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல மாநிலங்களில் முழுமையாக 'பந்த்' நடந்துள்ளது. மோடி அரசு, நினைத்ததை எல்லாம் செய்து மக்கள் வாழ்வை படுகுழியில் தள்ள அனுமதிக்க மாட்டோம். அரசு புரிந்துக் கொள்ள மறுத்தால், போராட்டங்கள் தீவிரமாகும்.

'டவுட்' தனபாலு: இது போன்ற போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தான் கெடுமே தவிர, அரசுகள் தங்கள் கொள்கையை, சட்டங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இதை எப்போது உங்களைப் போன்ற, 'ஜிந்தாபாத்' கட்சிகள் புரிந்துக் கொள்ளுமோ என்பதே மக்களின், 'டவுட்' ஆக உள்ளது!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; பேரம் பேசப்படுகின்றனர் -என்கிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கட்சி வலிமையாக இல்லாததால் மிரட்டப்படுகின்றனர். கட்சியினரிடம் மன வலிமையில்லாததால் பேரம் பேசப்படுகின்றனர்.

'டவுட்' தனபாலு: பிற கட்சிகளை விட, நாம் தமிழர் கட்சி தான், பெரும்பாலும் எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக விளங்குகிறது. உதாரணமாக, வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை கட்சி தலைவர்கள் துவக்காத நிலையில், சீமான் துவக்கிவிட்டாரே. இதுபோல வித்தியாசமாக செயல்படுவதால் தான், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளால் அந்த கட்சி 'தாக்க'ப்படுகிறது. இப்போது, அந்த அணியில் பா.ஜ.,வும் சேர்ந்து விட்டதோ என்ற, 'டவுட்' வருகிறது!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலின் போது ஒவ்வோர் ஊராகச் சென்று, 'யாருக்காவது எந்த கோரிக்கையாவது இருந்தால், சென்னை கோட்டை வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த 'சீட்'டை காண்பித்து நேரடியாக என் அறைக்கு வரலாம்' என்றார். இப்போது போக முடியுமா?

'டவுட்' தனபாலு: ஸ்டாலின் சொன்னார் சரி. அதை உண்மை என நம்பி, மக்களும் ஓட்டளித்து விட்டனரே... அதை பார்க்கும் போது, மக்களின் மூளையை கட்சிகளும், அதன் தலைவர்களும் எப்படி எல்லாம் சலவை செய்துள்ளனர் என்பது விளங்கும். இப்படி இல்லாமல், சிந்தித்து மக்கள் ஓட்டளிப்பது எந்நாளோ என்பதே, நடுநிலையாளர்களின், 'டவுட்' ஆக உள்ளது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-செப்-202115:22:48 IST Report Abuse
D.Ambujavalli எந்தத்தலைவர், கட்சிதான் 'நாங்கள் எளிமையானவர், மக்கள் நண்பர்கள்' என்று பல்லவி படவில்லை ? இதை அன்றும் யாரும் நம்பவில்லை நீங்கள் மட்டும் மனுக்களுடன் வந்தவர்களை பூர்ண கும்பத்துடன் சிந்தித்தீர்களா? கான்ட்ராக்டர்களுங்க்கு தானே உங்கள் 'சமூகத்திலும்' இடம் கிடைத்தது இந்த ஈயம், பித்தளை பழமொழி, சொல்லி, கேட்டு அலுத்துவிட்டது
Rate this:
Cancel
gopal - chennai,இந்தியா
29-செப்-202108:23:36 IST Report Abuse
gopal பெரும்பாலான தமிழக மக்கள் மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர் என்பதில் ஐயமில்லை . தமிழகம் இனிமேல் உருப்படுமா என்பதில் மிகுந்த ஐயம் உள்ளது. பயமாகவும் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X