சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'சீரியல்'களுக்கும் தணிக்கை வேண்டும்!

Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'சீரியல்'களுக்கும் தணிக்கை வேண்டும்!என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மனதையும், உடலையும் பதற்றமில்லாமல் வைத்துக் கொள்ள, 'டிவி சீரியல்' பார்க்காமல் இருந்தாலே போதும்' என, சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல; பல மனநல மருத்துவர்களின் கருத்தும் இப்படி தான் உள்ளது.ஒரு காலத்தில் இரவு நேரத்தில் வானொலியில்


'சீரியல்'களுக்கும் தணிக்கை வேண்டும்!என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மனதையும், உடலையும் பதற்றமில்லாமல் வைத்துக் கொள்ள, 'டிவி சீரியல்' பார்க்காமல் இருந்தாலே போதும்' என, சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல; பல மனநல மருத்துவர்களின் கருத்தும் இப்படி தான் உள்ளது.ஒரு காலத்தில் இரவு நேரத்தில் வானொலியில் ஒலிபரப்பாகும் பழைய பாடல்களை கேட்கும்போதே, துாக்கம் கண்களை தழுவிக் கொள்ளும். ஆனால், இன்று நள்ளிரவு வரை ஒளிபரப்பாகும் வன்மம் மிகுந்த சீரியல்களை பார்த்து, பலர் துாக்கத்தை தொலைத்து, மன நெருக்கடியில் வாழ்கின்றனர்.சினிமா, மூன்று மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால், ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் சீரியலால், மக்கள் மனதில் வன்மம் நிலைத்து நிற்கிறது.மருமகள் எப்படி தன் மாமியாரை கொல்கிறாள்; தாய், தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய எப்படி முயற்சிக்கிறாள்; ஒருவரது வளர்ச்சியை தடுக்க, எப்படி எல்லாம் திட்டமிடலாம்... இப்படி தான், அனைத்து சீரியல் கதைகளும் உள்ளன.
இது போன்ற சீரியல்களை தொடர்ந்து பார்ப்பதால், வீட்டில் உள்ளோர் மனதில் விஷம் துாவப்பட்டு, பல குடும்பங்களில் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முன்பெல்லாம் குற்றச் செயலில் ஈடுபடுவோர், சினிமாவை பார்த்து அதே போல் செய்ததாக வாக்குமூலம் தருவர்; ஆனால், தற்போது அந்த இடத்தை சீரியல்கள் பிடித்துள்ளன.தடம் புரண்டு செல்லும் சீரியலுக்கு ஒரு முடிவு வேண்டும். தங்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு என்பதை தயாரிப்பாளரும், இயக்குனரும் உணர்ந்து, நல்ல எண்ணங்களை மக்களிடம் விதைக்கும் சீரியல்களை உருவாக்கலாம்.அரசும், சீரியல்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். முக்கியமாக இரவு 8:00 மணிக்கு மேல் சீரியல் ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும். சினிமாவிற்கு உள்ளது போல இதற்கும் தணிக்கை முறை வர வேண்டும்.


எதிர்மறை எண்ணம் வளர்க்காதீர்!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: மீண்டும், 'நீட்' தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. தற்கொலை செய்த மாணவ, மாணவியரின் குடும்பத்திற்கு அரசும், அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு உதவி செய்து, அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி காட்டுகின்றன. இதுவும் ஒரு வகையில், நீட் படிக்கும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டுவதாக தான் அமைகிறது.இக்கால மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால், எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல!மாற்றுத்திறனாளிகள், ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளி வருகின்றனர்; பல்வேறு உயர் நிறுவனங்களை வழி நடத்துகின்றனர்.இதே நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற ஏழை விவசாயி மகன், தன் கிராமத்திலிருந்து நெடுந்தொலைவிலுள்ள நகரத்திற்கு சென்று பயிற்சி வகுப்பில் படித்து, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்பில் நுழைந்துள்ளார்.இவர்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கையை தவிர, வேறு எதுவும் ஊன்றுகோலாக இருந்ததில்லை.நம் தமிழக அரசியல்வாதிகள், 'நீட் என்பது மிக கடினமானது; அதில் தேர்ச்சி பெறுவது கடினம்' என்ற எதிர்மறை எண்ணத்தை மட்டுமே மாணவர்களிடையே வளர்த்து விட்டுள்ளனர்.எப்படி, 'ஹிந்தி படித்தால் தமிழுக்கு ஆபத்து' என பொய் கருத்தை பரப்பினரோ, அதே போல நீட் தேர்வு குறித்தும் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.நாடு முழுதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஆனால், 'நீட் தற்கொலை' தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லையே... ஏன்?காரணம், பெரும்பாலான தமிழக பெற்றோர் தங்கள் பிள்ளையின் விருப்பத்தை நிராகரித்து, 'டாக்டருக்கு படி' என கட்டாயப்படுத்துவது தான்; இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அறிவியல், நடிப்பு, இசை, ஓவியம், அரசியல், வியாபாரம், விளையாட்டு... இப்படி ஏதாவது ஒரு திறமை, நிச்சயம் நம் பிள்ளையிடம் இருக்கும்.நம் பிள்ளை டாக்டர் ஆகாவிட்டால் என்ன... ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆகலாமே! தகவல் தொழில்நுட்பத்தில் நிறைய சாதிக்கலாம்; விஞ்ஞானியாகி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம். அட... படிப்பே வராவிட்டாலும்,
விளையாட்டு துறையில் ஈடுபட்டு, பதக்கங்களை வென்று வருவதும் பெருமை தானே!வாழ்க்கை என்பது நீட் தேர்வு என்ற குறுகிய வட்டத்திற்குள் முடிவதில்லை. 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை
பூமியில்...' என்ற கண்ணதாசன் வரிகளே, நமக்கு தன்னம்பிக்கை ஊட்டும்!


எங்களை கொஞ்சம் கவனியுங்கள்!கே.பி.சுரேஷ்குமார், மே லுார், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், 1.25 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பணபலன்கள் ஏதும் கடந்த ஆட்சியில் கிடைக்கவில்லை. தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும், அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது, சோகத்தை தருகிறது.போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, 14வது ஓய்வூதிய ஒப்பந்தம், 2019 செப்., 1 முதல் நிலுவையில் உள்ளது. 2015 நவம்பர் முதல் 70 மாதமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.நீண்ட காலமாக, 'அரியர்ஸ்' தொகையும் வழங்கவில்லை; 'பேட்டா'வும் உயரவில்லை. சீருடை மற்றும் நடத்துனர் பணப்பை ஆகியவை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.இப்படி பல்வேறு பலன்கள் கிடைக்காமல், அந்த தொழிலாளர்கள் மன சோர்வு அடைந்துள்ளனர். மற்ற அரசு துறைகளை விட மிக குறைந்த சம்பளமே, போக்குவரத்து தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், தொழிலாளர்களின் நிலை சிரமத்தில் உள்ளது.எனவே தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களின் நிலை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-செப்-202115:39:35 IST Report Abuse
D.Ambujavalli என்னவோ நீட் எழுதி நாலாவது நாளே டாக்டராகக் கொட்டி முழக்கலாம் என்று கனவு காணும் பெற்றோர், அத்துறையில் செட்டிலாக பத்து வருஷம் கூட ஆகலாம் , அதுவரை அவர்களை அடைகாக்க வேண்டும் எல்லாரும் போனால் நாமும் போவோம் என்னும் ஆட்டுமந்தை மாற வேண்டும்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
29-செப்-202110:09:18 IST Report Abuse
chennai sivakumar நீட் ஒரு பூதம், ராட்சசன். இதைத்தான் நமது கட்சிகள் செய்து கொண்டு இருக்கிறது. நீட் ஐ விட கடினம் IAS போன்ற தேர்வுகள். அதில் தோல்வி பெரும் யாரும் தற்கொலை செய்து கொள்ள வில்லையே? இந்த தலைமுறைக்கு பொதுவாக No self confidence அல்லது மிக மிக குறைவு. அவர்களுக்கு proper counselling கொடுத்து முன்னேற செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X