வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021
Share
Advertisement
சியோல் :வட கொரியா இன்று (செப்.28) மீண்டும் குறுகிய துாரம் செல்லும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.கிழக்காசிய நாடான வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை உட்பட மூன்று ஏவுகணை சோதனைகளை நடத்தியது.இந்நிலையில் இன்று (செப்.28) குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா ஏவி சோதித்தது. மலைப் பிரதேசமான ஜகாங் மாகாணத்தில் ஏவப்பட்ட இந்த
 வட கொரியா, மீண்டும், ஏவுகணை, சோதனை

சியோல் :வட கொரியா இன்று (செப்.28) மீண்டும் குறுகிய துாரம் செல்லும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

கிழக்காசிய நாடான வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை உட்பட மூன்று ஏவுகணை சோதனைகளை நடத்தியது.இந்நிலையில் இன்று (செப்.28) குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா ஏவி சோதித்தது. மலைப் பிரதேசமான ஜகாங் மாகாணத்தில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை, கிழக்கு கடல் பகுதியில் சென்று விழுந்துள்ளது.


latest tamil news




இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 'சமரச பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக இது போன்ற ஏவுகணை சோதனை நடத்துவது சரியல்ல' என, தென் கொரியா தெரிவித்துள்ளது.இதற்கிடையே, 'வட கொரியாவின் குறுகிய துார ஏவுகணை சோதனையால் வட கொரியாவின் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்கள் மதிப்பிழந்து விடும்' என, அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் கடல் பிராந்திய பிரிவு எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X