பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உபகரண பூங்கா மத்திய அரசு ரூ.100 கோடி

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைப்பதற்காக, மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அனுமதி வழங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து 'சிப்காட்' அதிகாரிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைப்பதற்காக, மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அனுமதி வழங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 'சிப்காட்' அதிகாரிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரகடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில், மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைப்பதற்கான, முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது.

சென்னை மருத்துவ சுற்றுலா தலமாக இருப்பதால், இங்குள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வழங்க ஏதுவாக, இந்த பூங்கா அமைக்க படுகிறது.

'பல்ஸ் ஆக்சிமீட்டர்' முதல் மருத்துவமனைகளுக்கு தேவையான, அனைத்து உபகரணங்களும் தயாரிப்பதற்கான வசதிகள், ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ உபகரணங்களை வடிவமைக்கும் வசதிகளும் அமைகின்றன. இது தவிர, தொழிற்சாலைகள் துவங்க ஏதுவாக 'பிளக் அண்ட் பிளே' வசதியும் செய்து தரப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு, முதற்கட்ட அனுமதி வழங்கி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இங்கு தொழில் துவங்க, அதிக நிறுவனங்கள் ஆர்வமுடன் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X