அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவ.1 முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி: தமிழக அரசு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 1ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.28) உத்தரவிட்டுள்ளார்.மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, ஏற்கனவே 9-12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்காக பள்ளி மற்றும் கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.அதேபோல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 1ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.28) உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, ஏற்கனவே 9-12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்காக பள்ளி மற்றும் கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.

அதேபோல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும், 1-8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிகல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news





தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31 வரை நீட்டிப்பு



தமிழகத்தில் வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கோவிட் தொற்று பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அதனை கட்டுப்படுத்தும் வகையில் அக்.31 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிரு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.


பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி



பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202122:30:05 IST Report Abuse
kulandai kannan நவம்பர் 4, தீபாவளி விடுமுறை உண்டா?? மாணவர்கள் மைண்ட் வாய்ஸ்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-செப்-202121:45:32 IST Report Abuse
Ramesh Sargam அனைத்து பள்ளிக்கூடங்களிலும், அரசு பள்ளிக்கூடங்கள் உட்பட, ஒரு சில மருத்துவர்கள் , ஒரு சில செவிலியர்கள் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்திருப்பது நன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X