பொது செய்தி

இந்தியா

தளவாட தொழிற்சாலை வாரியம் கலைப்பு வேறு நிறுவனங்களுக்கு ஊழியர் மாற்றம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி:ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம், அக்., 1ம் தேதி கலைக்கப்படுவதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்கள், ஏழு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளனர். இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள், ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய தொழிற்சாலை. தமிழகத்தில் ஆறு தொழிற்சாலைகள் உட்பட

புதுடில்லி:ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம், அக்., 1ம் தேதி கலைக்கப்படுவதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

இதில் பணியாற்றும் ஊழியர்கள், ஏழு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளனர். இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள், ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய தொழிற்சாலை. தமிழகத்தில் ஆறு தொழிற்சாலைகள் உட்பட நாடு முழுதும் 41 ஆலைகள் ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியத்தின் கீழ் உள்ளன.

ராணுவ தளவாட வழங்கலில் தன்னாட்சி, பொறுப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்து வதற்காக இந்த தொழிற்சாலைகளை 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனம் அல்லது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு நிறுவனமாக்க அரசு முடிவு செய்துள்ளது.கடந்தாண்டு மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அக்., 1ம் தேதியுடன், இந்த வாரியம் கலைக்கப்படுவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுஉள்ளதாவது:வாரியத்தின் கீழுள்ள 41 உற்பத்தி மற்றும் உற்பத்தி சாராத பிரிவுகள், மத்திய அரசின் ஏழு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றப்படுகின்றன.

இந்த பிரிவுகளின் நிர்வாகம், கட்டுப்பாடு, செயல்பாடு, பராமரிப்பு என, அனைத்தும் மாற்றப் படுகின்றன. அதன்படி வாரியத்தின் கீழுள்ள ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்களும், ராணுவத்தின் கீழுள்ள இந்த ஏழு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தேவை அதிகரிப்பு!

உலகெங்கும் பாதுகாப்பு சூழ்நிலை வேகமாக மாறி வருகிறது. நவீன ஆயுதங்கள், தளவாடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த நல்வாய்ப்பை தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கு அதிக முதலீடு செய்ய வேண்டும்.
ராஜ்நாத் சிங்,


ராணுவ அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X