சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேலும் ஒரு நகை கடை மீது பல கோடி ரூபாய் மோசடி புகார்

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:தீபாவளி சீட்டு மற்றும்தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, ரமேஷ் ஜூவல்லரி என்ற கடையின் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.கேரளாவைச் சேர்ந்த சுஜித் ஷெரியன், 48; இவரது மனைவி தான்யா, 38; சகோதரர் சுனில் ஷெரியன் ஆகியோர், சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கே.எப்.ஜே., என்ற நகைக் கடையை நடத்தி

சென்னை:தீபாவளி சீட்டு மற்றும்தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, ரமேஷ் ஜூவல்லரி என்ற கடையின் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுஜித் ஷெரியன், 48; இவரது மனைவி தான்யா, 38; சகோதரர் சுனில் ஷெரியன் ஆகியோர், சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கே.எப்.ஜே., என்ற நகைக் கடையை நடத்தி வந்தனர்.இவர்கள் நகை முதலீடு திட்டத்தின் கீழ், 1,689 பேரிடம், 26 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவர்கள் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, சுஜித் ஷெரியன், சுனில் ஷெரியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வந்த மேலும் ஒரு நகைக்கடை மீதும் மோசடி புகார் எழுந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர்வெங்கடேஸ்வரா அக்ரஹாரத்தை சேர்ந்த வீரவேலு உட்பட, 25க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நான் பள்ளி வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறேன். மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியில், ரமேஷ் ஜூவல்லரி என்ற கடை இருந்தது. இந்தக் கடையை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் நாராயணன், மனைவி, தாய், சகோதரர் ஆகியோர் நடத்தி வந்தனர்.

இவர்கள் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ், 1,000க்கும் மேற்பட்ட நபர்களிடம், பல கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X