பாக்.,கில் செயல்படும் 12 பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்க பார்லி.,யில் தாக்கலான அறிக்கை

Updated : செப் 29, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிடப்பட்ட 12 பயங்கரவாத அமைப்புகள், பாக்.,கில் இருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. இதில் ஐந்து குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், இந்த பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க பார்லி., ஆராய்ச்சி சேவை என்ற தன்னாட்சி
பாக்.,கில் செயல்படும் 12 பயங்கரவாத அமைப்புகள் ,வெட்டவெளிச்சம்!   இந்தியாவுக்கு எதிராகவும் இயங்கும் ஐந்து குழுக்கள் அமெரிக்க பார்லி.,யில் தாக்கலான அறிக்கையில் தகவல்

வாஷிங்டன் : அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிடப்பட்ட 12 பயங்கரவாத அமைப்புகள், பாக்.,கில் இருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. இதில் ஐந்து குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க பார்லியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், இந்த பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லி., ஆராய்ச்சி சேவை என்ற தன்னாட்சி அமைப்பு, பல்வேறு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை பார்லி.,யில் தாக்கல் செய்கிறது. இது பார்லி.,யின் அதிகாரப்பூர்வமான அறிக்கையாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்கள் புரிந்து கொள்வதற்காக தாக்கல் செய்யப்படுகிறது.

அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவால், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டுள்ள 12 பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன. இதில் பல அமைப்புகள் 1980களில் இருந்து அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்த 12 அமைப்புகளை உலக அளவில் இயங்குபவை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இயங்குபவை, இந்தியாவுக்கு எதிரானவை, காஷ்மீருக்காக இயங்குபவை மற்றும் உள்நாட்டில் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கு எதிராக இயங்குபவை என, ஐந்து வகையாக பிரிக்கலாம். இதில், ஐந்து பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக இயங்குகின்றன.

கடந்த 1980களில் உருவாக்கப்பட்ட லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை 2001ல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு, இந்தியாவின் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் உட்பட பலவற்றில் நேரடி தொடர்புள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசார், 2000ல் உருவாக்கிய ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு, 2001ல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. லஷ்கர் - இ - தொய்பா அமைப்புடன் இணைந்து, இந்திய பார்லிமென்டில் 2001ல் நடந்த தாக்குதல் உட்பட பலவற்றில், இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.'அமெரிக்காவுக்கு எதிராக போர் தொடுப்போம்' என, இந்த அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில், ரஷ்ய படைகளுக்கு எதிரான போரின்போது 1980ல் உருவாக்கப்பட்டது, ஹராகதுல் ஜிஹாத் இஸ்லாமி அமைப்பு. இதை 2010ல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 1989க்குப் பின், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

கடந்த 1989ல் உருவாக்கப்பட்டது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு. 2017ல் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு, ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் முக்கிய அமைப்பாக உள்ளது.கடந்த 2019ல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையில், 'பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடமாக உள்ளது' என, குறிப்பிடப்பட்டுஉள்ளது.பாகிஸ்தான் அரசும், ராணுவமும், தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளித்து, ஆதரவும் அளித்து வருகின்றன. பாகிஸ்தான் அரசு, தங்கள் மண்ணில் இருந்து பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதற்கு அனுமதித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பாக்., பயங்கரவாதி கைதுஜம்மு - காஷ்மீரின் உரி பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, 19 வயது பயங்கரவாதி பிடிபட்டார். அதே நேரத்தில் மற்றொரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது:கடந்த 2016ல் உரியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடந்திய தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்திய அதே வழியைப் பயன்படுத்தி, இவர்களும் நுழைய முயன்றனர்.

பாதுகாப்புப் படையினரை பார்த்ததும், ஒரு பயங்கரவாதி துப்பாக்கியால் சுட முயன்றார். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவருடன் வந்தவர் சரணடைந்தார்.விசாரணையில், அவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அலி பாபர் பத்ரா என்ற அந்த இளைஞர், குடும்பத்தின் வறுமையால் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக கூறினார்.
கடந்த 2019ல் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், பயிற்சி அளித்தவர்களில் பெரும்பாலானோர் பாக்., ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கூறியுள்ளார்.
பயிற்சியின்போது ஜம்மு - காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதாக மூளைச் சலவை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாராமுல்லாவில் குறிப்பிட்ட இடத்தில் ஆயுதங்களை ஒப்படைக்க வந்ததாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
29-செப்-202116:55:35 IST Report Abuse
canchi ravi பாகிஸ்தானாவது சீராவதாவது. உலக வரைபடத்திலிருந்து நீக்கம்பட்டும் வரை பாக் மாறாது.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-செப்-202115:18:13 IST Report Abuse
Anand மேற்படி அந்த பயங்கரவாதிகளுக்கு இங்குள்ள சில ஒட்டு பொருக்கி அரசியல்வாதிகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆதரவு கொடுப்பவர்களை வேரோடு அழிப்பது எப்போது? இவனுங்களை அழித்தால் தான் நாடு நிம்மதி அடையும்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
29-செப்-202109:00:17 IST Report Abuse
Paraman பீஜிங்ஜிங் பைடன், கமலா இருக்கும் வரை பக்கிகளை ஒன்னும் செய்ய முடியாது. இந்த 12. என்ற தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கை இந்த இரு இந்திய, உலக விரோத ஜென்மங்கள் இருக்கும் வரை 120 ஆக உயரும் ஏற்கனவே ட்ரம்ப் போட்ட கட்டுப்பாடுகளை நீக்கி பக்கிகளுக்கு பண உதவி, ஆயுத உதவிகளை திறந்து விட்டுவிட்டான் இந்த மனநோய் பிடித்த பீஜிங் அடிமை பைடன். தாலிபான்களுக்கு இந்த சைக்கோ வழி அமைத்து கொடுத்ததற்கு முழு காரணமே, அதன் மூலம் இந்தியாவிற்கு பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். இவனையெல்லாம் மதித்து நம் அரசும், பிரதமந்திரியும் பேசுவதே நமது தன்மானத்திற்கு இழுக்கு
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
29-செப்-202110:03:29 IST Report Abuse
Mohanகரெக்டா சொன்னீங்க ..பிடன் என்னைக்கு நம்ம முதுகுல பலமா குத்த போர்னோ தெரியல ஏற்கனவே ஆப்கானிஸ்தான் விஷயத்துல குத்திட்டான்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X