பொது செய்தி

தமிழ்நாடு

வீடு ஒதுக்கீட்டில் விலக்கு வீட்டுவசதி வாரியம் முடிவு

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:'அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கான குடியிருப்பு திட்ட நிபந்தனைகள், சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு பொருந்தாது' என்று வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.சென்னை, கோயம்பேடை அடுத்த நெற்குன்றத்தில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்காக, சுயநிதி முறையில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 570 வீடுகள் இரண்டு பிரிவுகளாக கட்டப்படுகின்றன.முதல்

சென்னை:'அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கான குடியிருப்பு திட்ட நிபந்தனைகள், சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு பொருந்தாது' என்று வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை, கோயம்பேடை அடுத்த நெற்குன்றத்தில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்காக, சுயநிதி முறையில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 570 வீடுகள் இரண்டு பிரிவுகளாக கட்டப்படுகின்றன.முதல் கட்டமாக, 381 வீடுகளை ஒதுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகத்தை, வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.

வீடு கோரி விண்ணப்பிக்க, அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு , உள்ளன.'அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் வீடு பெற்ற அதிகாரிகள், இதில் விண்ணப்பிக்க கூடாது' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை, இத்திட்டத்தில் வீடு ஒதுக்கும் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில், பல்வேறு குழப்பம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், சர்ச்சையான நிபந்தனைகளை வீட்டுவசதி வாரியம் திருத்தியுள்ளது.

அதன் விபரம்:

* ஒரே குடும்பத்தில் ஒருவர் மட்டுமே, வீடு பெற விண்ணப்பிக்க வேண்டும்
* அரசின் விருப்புரிமை பிரிவில், குடும்பத்தில் யாராவது ஒருவர் வீடு பெற்றிருந்தாலும் மற்றவர்கள் விண்ணப்பிக்க கூடாது

* சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட, சிறப்பு அதிரடி படையில் பணிபுரிந்ததற்காக, பரிசாக வீடு பெற்றவர்களுக்கு, விருப்புரிமை பிரிவு கட்டுப்பாடு பொருந்தாது.

பரிசாக வீடு பெற்றவர்கள், மேலும் ஒரு வீட்டை விலைக்கு வாங்க எவ்வித தடையும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X