சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது!

Added : செப் 28, 2021
Share
Advertisement
வேலைக்கு செல்லும் தம்பதியர் குழந்தைக்காக ஏங்கும் நிலையை போக்க வழிகூறும், மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்: ஆண், பெண் இருவரும் வேலைக்கு போகும் சூழலில், யாருடைய வேலை முக்கியமானது என்று கவனித்து, பணி மாற்றங்களை செய்யலாம். குழந்தை பேறை தள்ளிப் போட மாத்திரை போட்டுக் கொண்டால், அதை சரி செய்ய மீண்டும் மாத்திரை போட வேண்டிய சூழல் வரலாம். எனவே, இயற்கைக்கு மாறாக
சொல்கிறார்கள்

வேலைக்கு செல்லும் தம்பதியர் குழந்தைக்காக ஏங்கும் நிலையை போக்க வழிகூறும், மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்: ஆண், பெண் இருவரும் வேலைக்கு போகும் சூழலில், யாருடைய வேலை முக்கியமானது என்று கவனித்து, பணி மாற்றங்களை செய்யலாம். குழந்தை பேறை தள்ளிப் போட மாத்திரை போட்டுக் கொண்டால், அதை சரி செய்ய மீண்டும் மாத்திரை போட வேண்டிய சூழல் வரலாம்.

எனவே, இயற்கைக்கு மாறாக செயல்படாமல் இருப்பது நல்லது.இரவு பணியில் இருக்கும் பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படலாம். காரணம், பகலில் விழித்திருக்கும் உடல் உறுப்புகள், இரவில் ஓய்வெடுக்க நினைக்கும். அதன் சுழற்சியை நாமாக மாற்றி அமைக்கும் போது, இயல்பாகவே உடலில் ஏற்படும் சில மாற்றங்கள், குழந்தை பேறுக்கான சுரப்பிகள் எல்லாம் செயலிழக்கும். உணவுப் பழக்கம் மாறும். இதனால் இயல்பான குழந்தைப் பேறுக்கு உடல் ஒத்துழைக்காது. மீண்டும் பழைய நிலைக்கு உடலை பழக்கவே 6 - 9 மாதங்கள், மருத்துவ உதவி தேவைப்படும்.பெண்களுக்கு வெள்ளைப்படுதல் முக்கிய பிரச்னை.

இது, உடலின் உள்ளே ஏற்பட்ட இன்பெக் ஷனின் அறிகுறி. அதை சரி செய்ய வேண்டும். இல்லையேல் கர்ப்பப்பையை இணைக்கும் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு, அது மூடிக் கொள்ளலாம். இதனால் கரு முட்டையும், உயிர்ச்சத்தும் சந்திக்க முடியாமல் போகும்.மாதவிடாய் சுழற்சி, காரணமின்றி மாறுபட்டால், அதை கவனித்து விடுவது நல்லது. நான்கைந்து நாட்கள் முன்போ, பின்போ இருப்பது பெரிய பிரச்னையல்ல. மாதவிடாய் தோன்றிய நாளில் இருந்து 12ம் நாளில் துவங்கி 18ம் நாள் வரையான காலம், கர்ப்பத்துக்கு உகந்தது. இந்த நாட்களில் பணி நேரத்தை குறைத்து சீக்கிரமே வீடு திரும்புவது, உடல் அலுப்பின்றி இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது, தேவைப்பட்டால் விடுப்பு எடுத்துக் கொள்வது என்று இலக்கை நோக்கிய திட்டங்களை மேற்கொள்ளலாம்.கருமுட்டை வளர்ச்சி இல்லாவிட்டால் குழந்தைக்கான வாய்ப்பு குறைவு என்பதால், அதன் வளர்ச்சி சீராக இயல்பாக உள்ளதா என்பதை ஸ்கேன் மூலம் அறியலாம்.

வேலைப்பளு, மன உளைச்சல், டார்கெட், பிரஷர் என பணிச்சுமை இருந்தால், யோகா, தியானம் என்று சிறிது நேரம் ஒதுக்கி மனதை ஒருநிலைப்படுத்துவது முக்கியம். திருமணமாகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வது தவறு. எதுவும் பெரிய பிரச்னையில்லை. எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. மனரீதியான பிரச்னை களை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். உடல் ரீதியான பிரச்னை என்று நினைத்தால், தம்பதி சமேதராக மருத்துவரை போய் பாருங்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X