பொது செய்தி

இந்தியா

பேரிடர் நண்பர்கள் திட்டம் 350 மாவட்டங்களில் அறிமுகம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (4+ 12)
Share
Advertisement
புதுடில்லி :''வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் உள்ளூர்வாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் பேரிடர் நண்பர்கள் திட்டம் 350 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.நடவடிக்கைஎன்.டி.எம்.ஏ., எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் 17வது நிறுவன நாளையொட்டி
பேரிடர் நண்பர்கள் திட்டம் 350 மாவட்டங்கள், அறிமுகம்

புதுடில்லி :''வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் உள்ளூர்வாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் பேரிடர் நண்பர்கள் திட்டம் 350 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.


நடவடிக்கை



என்.டி.எம்.ஏ., எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் 17வது நிறுவன நாளையொட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் நம் நாடு மிகச் சிறப்பாக செயல்
பட்டுள்ளது. பல உலக நாடுகள் கடுமையாக போராடிய நிலையில், மிகப் பெரிய மக்கள் தொகையை உடைய நம் நாடு சிறப்பாக கையாண்டது.


வைரஸ் பரவல்



தடுப்பில் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. கடந்த 1999ல் ஒடிசாவில் தாக்கிய புயலின்போது 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தாண்டில் புயலால் 50 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இந்த பலியையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் சரியான நேரத்தில் கிடைத்தால் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.


சோதனை முறை



பேரிடர் காலத்தின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்ளூர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேரிடர் நண்பர்கள் திட்டத்தை 25 மாநிலங்களில், 30 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தினோம். இதற்கு உள்ளூர்வாசிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுதும் 350 மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். பேரிடர் ஏற்பட்டால் மற்றவர்களை மீட்பதற்கு உடனடியாக ஈடுபடுவது குறித்து இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
29-செப்-202119:38:54 IST Report Abuse
S. Narayanan எந்த ஒரு திட்டத்தையும் வரைபவர் ஒருவர். அதில் ஒரு மாற்றங்கள் செய்பவர் இன்னொருவர். அதற்கு செயல் ஆக்கம் கொடுப்பவர் இன்னொருவர். கடைசியில் அதை செயல் படுத்துபவர் இன்னொருவர். கடைசியில் அதில் எதாவது குறைகள் இருந்தால் அது திட்டம் வரைந்தவரையே செரும். அது தான் இங்கு மத்திய அரசால் அமுலாக்க படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. இது நம்முடைய இந்திய மக்களுக்காக நிறுவப்பட்டது. இதில் சிறு குறைகளை காணாமல் மக்களின் பூர்த்தி ஆவதை கண்டு இது போன்ற செயல்களில் நாமும் பங்கு பெறவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியனுக்கு நிச்சயம் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-செப்-202117:05:08 IST Report Abuse
DVRR இதைத்தான் ஆர் எஸ் எஸ் செய்கின்றது வெள்ளமோ புயலோ வேறு ஒரு இடர்பாடோ அந்த இடத்தில். அதே ஸ்டைலில் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அமித் ஷாவினால்
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
29-செப்-202116:22:49 IST Report Abuse
Sandru ஐயா வட நாட்டு சதானந்த பாரதியே உங்கள் ஆட்சியே மக்களுக்கு பேரிடர்தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X