காவிரி ஆணைய தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 28, 2021
Share
Advertisement
தற்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தாரை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மத்திய அரசால் 2018ல் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவை
காவிரி ஆணைய தலைவர், எஸ்.கே.ஹல்தார் நியமனம்

தற்போது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தாரை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மத்திய அரசால் 2018ல் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன.

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையில் காவிரி நீரை முறையாக பங்கிட்டுக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட இவற்றில் காவிரி ஒழுங்கு முறைக் குழு அவ்வப்போது கூடி, ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அலுவலகம் மற்றும் ஊழியர்கள் என பல விஷயங்கள் அடங்கிய முழு உள்கட்டமைப்பும் இல்லை. இந்த ஆணையத்திற்கு முழு நேரத் தலைவர் நியமனமே இல்லாமல் இருந்தது.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருப்பவரே, இந்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கும் நிலை நீடித்து வந்தது.இந்நிலையில் மத்திய பணியாளர் நலம் மற்றும் நியமனங்கள் அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இதற்கான ஒப்புதலை மத்திய அரசின் நியமனங்களுக்கான அமைச்சரவை அளித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவியில் அவர் நீடிப்பார்.தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவியில் அவர் தற்காலிகமாக இருந்து வருகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X