சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏமன் சென்று திரும்பிய தஞ்சை வாலிபர் கைது

Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்ற, தஞ்சாவூர் வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குமரவேல் 31; கட்டடதொழிலாளி. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். விசா காலம் முடிந்தும் இந்தியா திரும்பாமல், சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்தார்.காலாவதியான விசாவில் இந்தியா
 ஏமன் சென்று திரும்பிய தஞ்சை வாலிபர் கைது

சென்னை:பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்ற, தஞ்சாவூர் வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குமரவேல் 31; கட்டடதொழிலாளி. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். விசா காலம் முடிந்தும் இந்தியா திரும்பாமல், சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்தார்.காலாவதியான விசாவில் இந்தியா திரும்ப முடியாததால், நண்பர்கள் ஆலோசனைப்படி ஏமன் நாட்டிற்கு சென்று, அங்கிருந்து போலி ஆவணங்கள் வாயிலாக விசா பெற முயன்றார்.

இது குறித்து ஏமன் நாட்டு குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து, குமாரவேலை கைது செய்தனர்.மேலும், அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். இதை அடுத்து, சார்ஜா வழியாக ஏர் அரேபியாவிமானத்தில், குமாரவேலை ஏமன் குடியுரிமை அதிகாரிகள், சென்னைக்கு அனுப்பினர். அத்துடன், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சென்னை திரும்பிய குமாரவேலை, குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அதன்பின், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
04-அக்-202116:42:57 IST Report Abuse
Ramu //நண்பர்கள் ஆலோசனைப்படி ஏமன் நாட்டிற்கு சென்று, அங்கிருந்து போலி ஆவணங்கள் வாயிலாக விசா பெற முயன்றார்.// - யாராக இருந்தாலும் சரியான தகவல்களை சரியான நபர் அல்லது இடத்தில இருந்துதான் பெறவேண்டும். விசா முடிந்துவிட்டால் ஒன்று நாட்டுக்கு திரும்பவேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும், நண்பர்களை எதற்காக ஆலோசிக்கவேண்டும் - இந்த அறியாமை அகலவேண்டும்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-அக்-202103:14:20 IST Report Abuse
NicoleThomson எப்படியோ பிளான் பண்ணிய மாதிரி வந்து சேர்ந்துட்டாரு தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X